முக்கிய முடிவொன்றை அறிவிக்க பாராளுமன்றம் செல்வதாக இன்று(19.07) காலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களை கருத்திற்கொண்டு, நாட்டை காக்கவும், நாட்டின் தேசிய அக்கறையினாலும் தான் சரியான முடிவினை உரிய தருணத்தில் எடுத்துள்ளதாக மக்கள் உணரவேண்டும் எனவும் அதற்காக தான் முக்கிய முடிவினை எடுக்கவுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.
தான் பாரளுமன்றத்துக்கு சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி போட்டியிலிருந்து விலகலாம் என்ற பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பினை சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ளார்.
