இந்தியாவின் குடியரசு தலைவர் என அழைக்கப்படும், இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு எனும் பழங்குடி இன பெண் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதியும் முதல் பழங்குடி இன பெண் ஜனாதிபதியுமாவார்.
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரௌபதி முர்மு போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரதமர் நர்ரேந்திர மோடியின் ஆதரவே இவரின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக கூரப்பப்டுகிறது.
எதிர்வரும் 25ம் திகதி இவர் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.