கொழும்பு கோட்டையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னதாக தொழிசங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்னதாக கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், தற்போது பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது.
இன்று அதிகாலை போராட்டக்காரர்கள் மீது இரானுவத்தினர் நடாத்திய மிலேட்சதனமான தாக்குதலை கண்டித்தும், அரசாங்கத்துக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் வழிகள் யாவும் முற்றாக மூடப்பட்டு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.