இராணுவ தாக்குதலுக்கு சர்வதேச சமூகம் கண்டனம்

இன்று(22.07) அதிகாலை,வ ஜனாதிபதி செயலகத்துக்குள்ள்ளும், கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீது நடாத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உலக நாடுகளது பிரதிநிதிகள் தமது கணடனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதிகாலை வேளையிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தனது கண்டனத்தை வெளியிட்ட அதேவேளை, உடனடி மருத்துவத்தை காயமடைந்தவர்க்ளுக்கு வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

நள்ளிரவு தாண்டி நடைபெற்ற இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் காலை வரையில் மருத்துவம் செய்ய இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கனேடிய தூதுவர் டேவிட் மக்கினோன் இவ்வாறான சூழ்நிலையில் ஏன் இந்த தாக்குதல் நடைபெற்றது என தன்னால் நம்பமுடியவில்லை எனவும், அதிகாரிகள் நிதானத்துடன் செயல்படுவதும், வன்முறையைத் தவிர்ப்பதும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியா அமைதியான போராட்டங்கள் மற்றும் உரிமை மீது எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகவும், காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதாகவும் இங்கிலாந்தின் தூதுவர் சாரா ஹல்டன் கருத்து வெளியிட்டுள்ளார்.

நோர்வே தூதுவர், நியூசிலாந்து தூதுவர் ஆகியோரும் தங்களது கவலையினையும், கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியமும் தாக்குதக்கல் நடாத்தப்பட்டு சிறிது நேரத்திலேயே தமது கட்டணங்களை வெளியிட்டு இருந்தது.

தற்போதைய மாற்றத்திற்கு கருத்து சுதந்திரம் இன்றியமையாததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணவேண்டிய நிலையில் காணப்படும் இலங்கை, இதுபோன்ற சுதந்திர செயற்பாடுகளை அடக்குவது எவ்வாறு மாற்றத்துக்கு கைகொடுக்குமெனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

 

Social Share

Leave a Reply