(ச.விமல் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானதிலிருந்து)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று(27.07) காலை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
துடுப்பாடி வரும் இலங்கை அணி சிறப்பான ஆரம்பம் ஒன்றை பெற்ற போதும், அடுத்தடுத்த மூன்று விக்கெட்களை இழந்தமையினால் தடுமாறும் நிலை ஏற்பட்டது. தேநீர்பான இடைவேளை வரை இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோரது இணைப்பாட்டம் மூலம் இலங்கை அணி மீண்டு வருகிறது.
ஆரம்பத்தில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த வேளையில் ஓஷத பெர்னாண்டோ ஆட்டமிழந்தார். அவரும் திமுத் கருணாரட்னவும் 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இருப்பினும் அடுத்தடுத்த இரண்டு விக்கெட்களை இலங்கை அணி இழந்த வேளையில் மதிய போசனத்துக்காக போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி ஆர்மபித்த வேளையில் தேவையற்ற துடுப்பாட்ட பிரயோகம் மூலமாக அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன ஆட்டமிழந்தார்.
இரு அணிகளும் தலா இவ்விரு மாற்றங்களை செய்து இந்த போட்டியில் விளையாடுகின்றன.
பாகிஸ்தான் அணி சார்பாக உபாதையடைந்த ஷஹின் ஷா அப்ரிடிக்கு பதிலாக நௌமன் அலி இணைக்கப்பட்டுள்ளார். அஷார் அலி நீக்கப்பட்டு, பவாட் அலாம் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி சார்பாக கஸூன் ரஜித்த நீக்கப்பட்டு, அசித்த பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார். மகேஷ் தீக்க்ஷனுக்கு பதிலாக இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளர் டுனித் வெல்லாலகே சேர்க்கப்பட்டுள்ளார்.
போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், தனது நூறாவது போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூசுக்கு இலங்கை கிரிக்கெட் கெளரவம் வழங்கியிருந்தது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் மற்றும் இலங்கை கிரிக்கெட் உபதலைவர் ஜெயந்த தர்மதாச ஆகியோர் இந்த கெளவரத்தை வழங்கியிருந்தனர்.
35 வயதான மத்தியூஸ், 2009 ஆம் ஆண்டு இதே மைதானத்தில், இதே பாகிஸ்தான் அணியுடனேயே டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார் என்பது முக்கிய வியிடம்.
அந்தப் போட்டியில் 42 மற்றும் 27 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். 1 விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டார். இலங்கை அணி 50 ஓட்டங்களினால் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. மதித்தியூஸ் இதுவரை 99 போட்டிகளில் 176 இன்னிங்சில் 6876 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, 33 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். 13 சதங்களையும், 38 அரைச்சதங்களையும் அவர் பெற்றுள்ளார்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 | |
| 1 | ஓஷத பெர்னாண்டோ | பிடி – மொஹமட் ரிஸ்வான் | மொஹமட் நவாஸ் | 50 | 70 | 4 | 3 |
| 2 | திமுத் கருணாரட்ண | பிடி – நசீம் ஷா | யாசிர் ஷா | 40 | 90 | 3 | 0 |
| 3 | குசல் மென்டிஸ் | Run Out | — | 03 | 10 | 0 | 0 |
| 4 | அஞ்சலோ மத்யூஸ் | 36 | 89 | 4 | 0 | ||
| 5 | தினேஷ் சந்திமல் | 35 | 66 | 5 | 0 | ||
| 6 | தனஞ்சய டி சில்வா | ||||||
| 7 | நிரோஷன் டிக்வெல்ல | ||||||
| 8 | ரமேஷ் மென்டிஸ் | ||||||
| 9 | பிரபாத் ஜயசூரிய | ||||||
| 10 | டுனித் வெல்லாலகே | ||||||
| 11 | அசித்த பெர்னாண்டோ | ||||||
| உதிரிகள் | 17 | ||||||
| ஓவர் 53 | விக்கெட் – 03 | மொத்தம் | 181 | ||||
| பந்துவீச்சாளர் | ஓவர் | ஓ.ஓ | ஓ | வி | |
| 1 | ஹசன் அலி | 10 | 02 | 35 | 0 |
| 2 | நசீம் ஷா | 09 | 03 | 19 | 0 |
| 3 | நௌமன் அலி | 07 | 01 | 24 | 0 |
| 4 | அஹா சல்மான் | 06 | 00 | 25 | 0 |
| 5 | மொஹமட் நவாஸ் | 11 | 02 | 39 | 1 |
| 6 | யாசிர் ஷா | 11 | 01 | 30 | 1 |
