இலங்கை எதிர் பாகிஸ்தான் – மீளெழும் இலங்கை

(ச.விமல் – காலி சர்வதேச கிரிக்கெட் மைதானதிலிருந்து)

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இன்று(27.07) காலை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

துடுப்பாடி வரும் இலங்கை அணி சிறப்பான ஆரம்பம் ஒன்றை பெற்ற போதும், அடுத்தடுத்த மூன்று விக்கெட்களை இழந்தமையினால் தடுமாறும் நிலை ஏற்பட்டது. தேநீர்பான இடைவேளை வரை இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் டினேஷ் சந்திமால் ஆகியோரது இணைப்பாட்டம் மூலம் இலங்கை அணி மீண்டு வருகிறது.

ஆரம்பத்தில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த வேளையில் ஓஷத பெர்னாண்டோ ஆட்டமிழந்தார். அவரும் திமுத் கருணாரட்னவும் 76 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இருப்பினும் அடுத்தடுத்த இரண்டு விக்கெட்களை இலங்கை அணி இழந்த வேளையில் மதிய போசனத்துக்காக போட்டி நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டி ஆர்மபித்த வேளையில் தேவையற்ற துடுப்பாட்ட பிரயோகம் மூலமாக அணியின் தலைவர் திமுத் கருணாரட்ன ஆட்டமிழந்தார்.

இரு அணிகளும் தலா இவ்விரு மாற்றங்களை செய்து இந்த போட்டியில் விளையாடுகின்றன.

பாகிஸ்தான் அணி சார்பாக உபாதையடைந்த ஷஹின் ஷா அப்ரிடிக்கு பதிலாக நௌமன் அலி இணைக்கப்பட்டுள்ளார். அஷார் அலி நீக்கப்பட்டு, பவாட் அலாம் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி சார்பாக கஸூன் ரஜித்த நீக்கப்பட்டு, அசித்த பெர்னாண்டோ சேர்க்கப்பட்டுள்ளார். மகேஷ் தீக்க்ஷனுக்கு பதிலாக இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளர் டுனித் வெல்லாலகே சேர்க்கப்பட்டுள்ளார்.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர், தனது நூறாவது போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூசுக்கு இலங்கை கிரிக்கெட் கெளரவம் வழங்கியிருந்தது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் மற்றும் இலங்கை கிரிக்கெட் உபதலைவர் ஜெயந்த தர்மதாச ஆகியோர் இந்த கெளவரத்தை வழங்கியிருந்தனர்.

35 வயதான மத்தியூஸ், 2009 ஆம் ஆண்டு இதே மைதானத்தில், இதே பாகிஸ்தான் அணியுடனேயே டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார் என்பது முக்கிய வியிடம்.

அந்தப் போட்டியில் 42 மற்றும் 27 ஓட்டங்களை அவர் பெற்றுக் கொண்டார். 1 விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டார். இலங்கை அணி 50 ஓட்டங்களினால் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. மதித்தியூஸ் இதுவரை 99 போட்டிகளில் 176 இன்னிங்சில் 6876 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு, 33 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். 13 சதங்களையும், 38 அரைச்சதங்களையும் அவர் பெற்றுள்ளார்.

 வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
1ஓஷத பெர்னாண்டோபிடி –  மொஹமட் ரிஸ்வான்மொஹமட்  நவாஸ்507043
2திமுத் கருணாரட்ணபிடி –  நசீம் ஷாயாசிர் ஷா409030
3குசல் மென்டிஸ்Run Out031000
4அஞ்சலோ மத்யூஸ்  368940
5தினேஷ் சந்திமல்  356650
6தனஞ்சய டி சில்வா      
7நிரோஷன் டிக்வெல்ல      
8ரமேஷ் மென்டிஸ்      
9பிரபாத் ஜயசூரிய      
10டுனித் வெல்லாலகே      
11அசித்த பெர்னாண்டோ      
 உதிரிகள்  17   
 ஓவர் 53விக்கெட் – 03மொத்தம்181   
        
 பந்துவீச்சாளர்ஓவர்ஓ.வி
1ஹசன் அலி1002350
2நசீம் ஷா 0903190
3நௌமன் அலி0701240
4அஹா சல்மான்0600250
5மொஹமட்  நவாஸ்1102391
6யாசிர் ஷா1101301
இலங்கை எதிர் பாகிஸ்தான் - மீளெழும் இலங்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version