ஐக்கிய அரபு இராட்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சைட் அல் நஹ்யன் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் சுமூகமான நிலையினை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்த்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமான உறவினை மேம்படுத்தவும், நட்புறவான இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பிலும், பிராந்திய மற்றும் உலகளாவிய விடயங்கள் தொடர்பிலும் இரு நாட்டு ஜனாதிபதிகளும் பேசியதாக மேலும் அறிய முடிகிறது.
