இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று(05.08) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் முன்னதாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, “ஜோசப் ஸ்டாலின் உட்பட அனைத்து ஜனநாயக போராளிகளையும் விடுதலை செய்” , “ஸ்ரீலங்கா அரசின் பாசிசவாதத்தை எதிர்த்து தொடர்ந்தும் நாம் போராடுவோம்” போன்ற கோஷங்களோடு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.