ஐ .பி .எல் கிரிக்கெட் போட்டி தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாட் அணி வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் எய்டன் மார்க்ராம் 27(32) ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 21(21) ஓடங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சன்ரைசர்ஸ் ஹைட்ராபாட் அணியின் ஜேசன் ஹோல்டர் 3(4-19) விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைட்ராபாட் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைட்ராபாட் அணியின் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 47(29) ஓட்டங்களையும் , ரிதிமன் சஹா 31(37) ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரவி பிஸ்நோய் 3(4-24) விக்கெட்களையும் மொஹமட் ஷமி 2(4-14) விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி 8 புள்ளிகளை பெற்று 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த சுற்று வாய்பை தக்கவைத்துள்ளது.
போட்டியின் நாயகனாக சன்ரைசர்ஸ் ஹைட்ராபாட் அணியின் ஜேசன் ஹோல்டர் தெரிவு செய்ப்பட்டார்.
நாளை (26/09/2021) பிற்பகல் 3:30 இற்கு சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடை பெறவுள்ளது. நாளை மாலை 7:30 இற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையிலான போட்டி நடை பெறவுள்ளது.
வி.பிரவிக்
தரம் – 03
(எழுத்து பிழைகள் திருத்தப்பட்டுள்ளன)
