இங்கிலாந்து பயணமான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து பயணமாகியுள்ளது. இங்கிலாந்தில் மூன்று இளையோர் ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது.

இன்று பிற்பகல் இலங்கை கிரிக்கெட் தலமையகத்திலிருத்து இலங்கை அணி புறப்பட்டு சென்றுள்ளது. இந்த அணியில் கனிஸ்டன் குணரட்ணம் என்ற தமிழ் வீரரும் இணைக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்
அபிஷேக் லியனாராச்சி(D.S. சேனாநாயக்க கல்லூரி), பவான் பத்திராஜ்(கண்டி, திருத்துவ கல்லூரி) , ரனுது சோமரட்ன(கண்டி, திருத்துவ கல்லூரி) , சதீஷ ராஜபக்ஷ(ரோயல் கல்லூரி), ஷெவோன் டானியல்(புனித ஜோசெப் கல்லூரி), அஞ்சல பண்டாரா(கொழும்பு, மகாநாம கல்லூரி), லஹிரு டேவத்தகே(புனித பீட்டர்ஸ் கல்லூரி), ரவீன் டி சில்வா – தலைவர்(நாளாந்தா கல்லூரி), வனுஜ சகான், வினுஜ ரன்புல்((நாளாந்தா கல்லூரி), மல்ஷா தருபதி(காலி ரிச்மண்ட கல்லூரி), டுவின்டு ரணதுங்க(கொழும்பு, மகாநாம கல்லூரி), சஹான் மிஹிர(பாணந்துறை, புனித ஜோன்ஸ் கல்லூரி), டுலாஜ் சமுதித்த ராஜபக்ஷ(வீரகெட்டிய மத்திய கல்லூரி), ட்ரவீன் மத்தியூ(கண்டி, புனித அந்தோனியார் கல்லூரி), ஹசித அமரசிங்க(மாத்தறை புனித சேர்வதியஸ் கல்லூரி), கனிஸ்டன் குணரட்ணம்(கொழும்பு, பரி தோமவின் கல்லூரி) , அசித்த வன்னிநாயகே(கண்டி, புனித அந்தோனியார் கல்லூரி)

இங்கிலாந்து பயணமான 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி

Social Share

Leave a Reply