இலங்கைக்கு இந்தியாவின் சுதந்திர தின பரிசு

இந்தியாவின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்தியா அரசாங்கம் இலங்கைக்கு கடல் ரோந்து பணிகளில் ஈடுபடுவதற்கான விமானம் ஒன்றை பரிசளித்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே இந்த விமானத்தை கையளித்தார்.

இலங்கை விமானப்படைக்கு டோனியர் 228 ரக விமானம் கையளிக்கப்பட்டதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு அதிகரிக்கப்படுமென இந்தியா உயர் ஸ்தானிகராலயம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வேறு வழிகளில் இந்தியா உதவுவது போன்று, கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த விமானப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தனது அண்டை நாடுகளுக்கும், இந்து சமுத்திரத்தின் நாடுகளுக்கும் ஆதரவாக செயற்படுவதற்கான நல்ல உதாரணமாக இந்த செயற்பாடு அமைவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்கே சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கைக்கு இந்தியாவின் சுதந்திர தின பரிசு

Social Share

Leave a Reply