இலங்கை கிரிக்கெட் 20-20 தொடரின் இறுதிப் போட்டி ஸ்கோர்

இலங்கை கிரிக்கெட் அழைப்பு தொடர் இறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சிவப்பு மற்றும் நீல அணிகள் மோதுகின்றன. கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிவப்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய நீல அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் லஹிரு உதார 37 ஓட்டங்களையும், அஷேன் பண்டார ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 25 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மகேஷ் தீக்ஷண, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், டுனித் வெல்லாலகே, லஹிரு மதுசங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply