எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கே உள்ள அபுசிர் பகுதியில் 4500 ஆண்டுகள் பழமையான கோயிலை எகிப்தின் தொல்லியல் துறையினர்
கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கோயிலானது பண்டைய எகிப்தின் 5 வது வம்சத்தின் போது கட்டப்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் உள்ளே சில மண் பானைகள் மற்றும் கண்ணாடிகள், சில முத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஐந்தாம் பேரரசின் அரசர்களின் பெயர்கள் உள்ளதாக தொல்லியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.