கொழும்பு, பாணந்துறை பகுதியில் சட்ட விரோத மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தயத்தில் பங்குபற்றிய 19 வயது இளைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். நேற்று நடைபெற்ற இந்த விபத்தில் இன்னுமொரு இளைஞன் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உரிய பாதுகாப்புகள் எதுவுமின்றி சாதாரண வீதியில் சாகச ஓட்ட பந்தயம் செய்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நடைபெற்ற விபத்தினை இந்த பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்த நபர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இரு மோட்டார் சைக்கிள்களும் விபத்துக்குளாகி நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காயங்களுக்குள்ளான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய இருவரும் நண்பர்கள் என்பதுடன் விபத்துக்கு முன்னதாக இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர்.
இறந்தவரின் தகப்பன் “தனது மகனுக்கு நடைபெற்றது பிறருக்கு நடைபெறக்கூடாது” என கருத்து வெளியிட்டுள்ளார்.
அதிக வேகம், கவலையீனம் விபத்துகளை ஏற்படுத்துமென தொடர்ந்தும் அறிவுறுத்தப்படும் நிலையில் இளைஞர்கள் அவற்றை செவிசாய்க்காமல் நடந்து கொள்வதினால் இவ்வாறான விபத்துகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. மோட்டார் சைக்கிளைகளை பாவிப்பது, ஓட்டுவது கடினமான ஆபத்தான செயல் என்பதனை இளைஞர்கள் மனதில் வைத்து செயற்பட்டால் விபத்துகளை குறைப்பதோடு, உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.
இந்த மோட்டார் சைக்களில் ஓட்ட பந்தயத்தில் பங்குபற்றியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, மோட்டார் சைக்கிளைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.