சிறுவர் நிலையங்களுக்கு புதிய தேசிய சட்டம்.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வரையறைகள் தொடர்பிலான திட்டங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை அனுமதி பத்திரத்தினை முன்வைத்துள்ளார்.

சிறுவர்களுக்கான பராமரிப்பு நிலையங்களில் மாகாண மட்ட வழிகாட்டுதல்களின் படி அவர்களுக்கான உரிய அபிவிருத்திகளை வழங்குவது தொடர்பிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும், தேசிய ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட திட்டம் ஒன்று இல்லையென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சிறுவர் அபிவிருத்திக்கான அடிப்படை தேவைகள் தொடர்பிலான திட்டங்கள் 2013 ஆம் ஆண்டு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நாடு முழுவதும் அமுல்படுத்தி அந்த திட்டங்களே நடைமுறையில் இருந்து வருகிறது.

சிறுவர் அபிவிருத்தி, சிறுவர் சட்டங்கள், சிறுவர் பராமரிப்பு கட்டங்கள், சுகாதரம் போன்ற காரணிகளை அவற்றுக்குரிய நிபுணத்துவம் பெற்றவர்கள், சிறுவர் பராமரிப்பு நிபுணர்கள் போன்றவர்களது ஆலோசனைகள், கருத்துக்கள் பெறப்பட்டு தேசிய ரீதியிலான இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை பதிவு செய்தல், அந்த நிலையங்களுக்கான ஊழியர்கள், நிறுவனமயமாக்கல், சிறுவர்களின் மீள் சமூகமயமாக்கல், உடற் சூழ்நிலை தரம், பாதுகாப்பு, சிறுவர் மருத்துவம் மற்றும் நலன், முறையீடுகளை கையாளுதல், மேற்பார்வை, நிலையங்களை மேற்பார்வை செய்தல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த தேசிய திட்டத்தினுள் உள்ளடக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply