கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15.08) விசாரணைக்கு சமூகமளிக்குமாறு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் விசாரணைக்காக சென்றிருந்த நிலையில் அவரிடம் சுமார் நான்கு மணி நேரம் விசாரணைகள் இடம் பெற்றுள்ளன.
இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவால் விசாரணைக்கு அழைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிவகரன், அடிப்படை ஆதாரமில்லாத அர்த்தமில்லாத முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயங்களை ஊடகத்தின் அடிப்படையில் வெறும் கற்பனையில் விசாரணை நடைபெற்றது என கூறியுள்ளார்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் எமது செயற்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்ட விசாரணை நடைபெற்றது. இவ்வாறான தொடர் விசாரணைகளை கண்டு அச்சமடையத் போவதில்லை என்றும் தமது சமூக பணி தொடரும் என
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் .சிவகரன் மேலும் தெரிவித்துள்ளார்.