தனியார் மயமாகவுள்ள அரச நிறுவனங்கள்

இலங்கையின் சில அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணர்களுடனான சந்திப்பில் இந்த விடயங்களை அவர் அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கா டெலிகாம் ஆகிய நிறுவனங்களே இவ்வாறு தனியாருக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியாருக்கு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை அரசு இந்த நிறுவனங்களுக்கு முதலீடு செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும், 40 வருடங்களுக்கு மேலாக வியாபார சந்தையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கள் இதற்கு எதிராக செயற்படுமென குறித்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட வேளையில் “தொழிற்சங்கங்கள் பற்றி தனக்கு கவலையில்லை எனவும், மக்களே முக்கியம்” என கூறிய ஜனாதிபதி இதன் மூலம் நன்மைகள் கிடைக்குமென மக்கள் உணர்ந்தால் நன்மைகள் நடக்குமென மேலும் தெரிவித்துள்ளார்.

கடல்சார் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் சட்டங்களும் திருத்தப்பட வேண்டும் என கூறிய ஜனாதிபதி, இலங்கை அயர்லாந்து நாட்டை முன்னுதாரணமாக எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டினார்.

Social Share

Leave a Reply