ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, அமைச்சு பதவியினை பெறவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என அந்த கட்சியின் பொது செயலாளர் பாரளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு அமைச்சு பதவி வழங்குவதாக வாய்ப்பு வந்தது. அதனை மறுத்துவிட்டேன். தான் கட்சி தாவலுக்கு முயற்சிப்பவன் அல்ல என கூறியுள்ள ரஞ்சித் மத்தும பண்டார தனது புத்தகத்தில் இதற்கெல்லாம் இடமிடமில்லை என தெரிவித்துள்ளார். “ஒரு காலத்தில் எனது கட்சியின் தலைவர்களே எனக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கூறினார்கள். அப்போது கூட நான் கட்சி தாவவில்லை” என அவர் மேலும் கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கம் என்ற பெயரில் கட்சிகளை உடைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாக குற்றம் சுமத்தியுள்ள ரஞ்சித் மத்தும பண்டார ஐக்கிய மக்கள் சக்தியினை உடைக்கும் திட்டங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
“நாம் அரசாங்கத்துக்கு பாராளுமன்ற குழுக்களினூடாக உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில் எனவும் கூறியுள்ளார்.