முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு உதவுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
நேற்று ஜனாதிபதிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க தமது கட்சி ஜனாதிபதிக்கு முழுமையாக ஆதரவு வழங்குமெனவுவம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்கு திரும்புவதற்கு சாதகமான, பாதுக்காப்பு நிலைமைகளை ஏற்படுத்தி வழங்குமாறும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை முன் வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேயவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியர்ச்சி, நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமன்ன, பசில் ராஜபக்ஷ, சாகர காரியவசம், ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி தரப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான வஜிர அபேயவர்தன, சாகல ரத்நாயக்க, ருவான் விஜயவர்தன, ஷமால் செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கோட்டா இலங்கை வர பாதுகாப்பு சூழலை ஏற்படுத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை.
https://peoplenews.lk/article/22262