கோட்டாபய நாடு திரும்புவதனை தடுக்க முடியாது – ஐக்கிய மக்கள் சக்தி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதனை யாரும் தடுக்க முடியாது. அவர் இந்த நாட்டின் குடியிருமையினை கொண்டவர். அவர் தாய் நாட்டுக்கு திரும்புவதற்கான சகல உரிமைகளையும் கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் P பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் நாடு திரும்பினாலும் அரச நிதிகளை முறைகேடாக பவித்தமைக்காக விசாரணை செய்யப்படவேண்டுமென மேலும் அஜித் P பெரேரா கூறியுள்ளார்.

நேற்று(19.08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இந்த விடயங்களை அவர் கூறினார். தனது பெற்றோரின் நினைவு சின்னத்துக்காக அரச நிதியினை முறைகேடாக பாவித்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது முன் வைக்கப்பட்டு வழக்கு தொரடப்பட்டது. அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவேண்டுமென அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவருக்கு சட்டபூர்வ விதிவிலக்கு இல்லாததால், அவர் விசாரணைகளை எதிர்கொள்ளவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தண்டனை வழங்கவும் முடியும், ”என்று அஜித் P பெரேரா தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply