முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று குற்றப் புலனாய்வு பிரிவு ஐந்து மணி நேர விசாரணை மேற்கொண்டுள்ளது. ரோயல் பார்க் கொலையாளி ஷர்மந்தா ஜெயமஹா, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் பதிவு செய்த அறிக்கையினை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.
2005 ஆம் ஆண்டு ரஜாகிரிய ரோயல் பார்க் கட்டிட தொகுதியினுள் யுவேனி ஜோன்சன் எனும் நபரை கொலை செய்த குற்றத்துக்காக ஷர்மந்தா ஜெயமஹாவிற்கு மரணதண்டை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்த வேளையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் வெளியாகினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலியா ரத்னா தேரர், இந்த விடுதலை தொடர்பில் விசாரணை செய்ய வேண்டுமென குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் புகார் செய்திருந்த்தார். அதனடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.