இராஜாங்க அமைச்சர்களது நியமனங்களை துரிதப்படுத்த கோரிக்கை

இராஜங்க அமைச்சர்களது நியமனத்தை துரிதப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன் வைத்துள்ளது.

நேற்று இரவு முந்தைய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சகல கட்சிகளும் அடங்கிய தேசிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு காலம் வழங்கவேண்டுமென தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ, தேசிய அரசாங்கம் சாத்தியமில்லை என்றால் அமைச்சரவை விரைவாக நியமிக்கப்பட வேண்டுமென, தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply