QR முறையினால் குறைந்த எரிபொருள் இறக்குமதி செலவு

QR அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நடைமுறைப் படுத்தப்பட்டதன் பின் எரிபொருள் இறக்குமதி செலவு 270 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 93 % எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் நடைபெறுகிறது. இந்த ஒதுக்கீட்டு முறைமையின் கீழ் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றமையை அடுத்து, மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது என, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply