இளைஞனிடம் திருடிய பொலிஸார் கைது

இளைஞர் ஒருவரின் தங்க சங்கிலியினையும், கையடக்க தொலைபேசியினையும் திருடிய குற்றச்சாட்டில் மாலபே பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் கொட்டாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி வீரகெட்டிய பகுதியினை சேர்ந்த இளைஞர், கொட்டாவயிலுள்ள அவரது சகோதரியின் வீட்டுக்கு வருகை தந்து, வாசலில் காத்திருந்த வேளையில் சந்தேக நபர்கள் நால்வர் அவரிடம் வீதி விலாசம் விசாரிப்பது போல விசாரித்து குறித்த திருட்டை மேற்கொண்டு முச்சக்கர வண்டியில் தப்பி சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த முச்சக்கர வண்டி மூலமாக கொட்டவை பொலிஸார் சந்தேக நபர்களை இனம் கண்டு கைது செய்துள்ளனர். மாலபே பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்ட் ஒருவர், மற்றும் விசேட பிரிவின் கான்ஸ்டபிள் மற்றும் இரு கான்ஸ்டபிள் ஆகியோர் இந்த சம்பவத்தின் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து முச்சக்கர வண்டியும், திருடப்பட்ட சங்கிலி மற்றும் தொலைபேசி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டி ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளினுடையது என இனம் காணப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Social Share

Leave a Reply