பாரளுமன்றத்தில் நெருக்கடி தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம்.

பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கையின் சமகால பொருளாதர சிக்கல் நிலைகள் தொடர்பில் விளக்கமளித்து, அறிவூட்டும் நிகழ்வு ஒன்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை பாராளுமன்ற குழு கூட்ட மண்டபத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுளளதாக சபாநாயகரின் அறிவுறுத்தலின் படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாரளுமன்ற பதில் செயலாளர் குஷானி ரோஹனதீர அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொருளாதர சிக்கல் நிலை தொடர்பிலும், எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் இந்த நிகழ்வில் விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும், இந்த நிகழ்வில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறும், பாரளுமன்ற பதில் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply