நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த 18ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வெளியாகி இருந்தது.
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்த இத் திரைப்படத்தில் நடிகர் பாரதி ராஜா,பிரகாஷ் ராஜ், நித்யா மேனன் மற்றும் ஏராளமான பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
எந்த காதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரியே தன்னை மாற்றிக்கொள்ளும் யதார்த்தமான நடிப்பினை கொண்ட நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் ஒரு டெலிவெரி பாயாக வலம் வந்து தன் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் காதல்,நட்பு,அழுகை,சிரிப்பு என அனைத்தினதும் கலவையாக மக்கள் மனதை ஆண்டு கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில், படம் வெளிவந்து 8 நாட்களின் முடிவில் உலகளாவிய ரீதியில் 68 கோடி ரூபா வரை வசூலித்துள்ளதாம்.
தொடர்ந்து நேற்றைய தினம் தனுஷ் உள்ளிட்ட திருச்சிற்றம்பலம் படக்குழுவினர் இப்படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகின்றன.
மேலும் நடிகர் தனுஷினுடைய திரைப்பயணத்தில் முக்கியமான ஒரு திரைப்படமாக இது அமையும் எனவும் பேசப்பட்டு வருகிறது.