-டுபாயிலிருந்து விமல்-
இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்து போயுள்ள போட்டி இலங்கை , ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சொதப்பியுள்ளது.
ஆரம்பம் முதல் விக்கெட்களை இழந்த நிலையில், இலங்கை அணி பெற்றுள்ள இந்த ஓட்ட எண்ணிக்கை போதுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி மிகவும் அபாரமாக பந்து வீசி கலக்கியுள்ளது. களத்தடுப்பிலும் மிகவும் அபாரமாக செய்யற்பட்டனர். ஆகோரோஷமா ஆப்கானிஸ்தான் அணி தமது திறமையினை வெளிக்காட்டியுள்ளது.
இலங்கை அணி துடுப்பாட்ட வரிசையில் செய்த மாற்றங்கள், இலங்கை அணியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது. வீரர்களிடையே புரிந்துணர்வின்றி, நுட்பமின்றி விளையாடியது தெளிவாக தென்பட்டது. இலங்கை அணி இலகுவாக ஆப்கானிஸ்தான் அணியினை எடுத்துவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.
சாமிக்க கருணாரட்ன இறுதி நேரத்தில் தனித்து நின்று போராடி பெற்ற ஓட்டங்கள் இலங்கை அணிக்கு ஓரளவு கைகொடுத்து ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தியுள்ளது.
மைதானத்தின் ரசிகர்களது சாதக தன்மையினை பாவித்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் பந்து வீசினால் வெற்றி வாய்ப்பை உருவாக்கலாம்.
இறுதி விக்கெட் இணைப்பாட்டம் ஓட்டங்களை வழங்கியது.
| வீரம் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸங்க | பிடி – கரீம் ஜனட் | நவீன் உல் ஹக் | 03 | 07 | 0 | 0 |
| குஷல் மென்டிஸ் | L.B.W | பஷால்கக் பரூக்கி | 02 | 04 | 0 | 0 |
| சரித் அசலங்க | L.B.W | பஷால்கக் பரூக்கி | 00 | 01 | 0 | 0 |
| தனுஷ்க குணதிலக | பிடி – கரீம் ஜனட் | முஜீப் உர் ரஹ்மான் | 17 | 17 | 3 | 0 |
| பானுக்க ராஜபக்ச | Run Out | 38 | 29 | 5 | 1 | |
| வனிந்து ஹசரங்க | பிடி – மொஹமட் நபி | முஜீப் உர் ரஹ்மான் | 02 | 08 | 0 | 0 |
| தஸூன் சானக | பிடி – | மொஹமட் நபி | 00 | 01 | 0 | 0 |
| சாமிக்க கருணாரத்ன | Bowled | பஷால்கக் பரூக்கி | 31 | 38 | 3 | 1 |
| மகேஷ் தீக்ஷன | Run Out | 00 | 00 | 0 | 0 | |
| மதீஷ பத்திரன | பிடி – நஜிபுல்லா ஷர்டான் | மொஹமட் நபி | 05 | 12 | 0 | 0 |
| டில்ஷான் மதுஷங்க, | Not out | 01 | 02 | 0 | 0 | |
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 19.4 | விக்கெட் 10 | மொத்தம் | 105 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| பஷால் கக் பரூக்கி | 03.4 | 01 | 11 | 03 |
| நவீன் உல் ஹக் | 03 | 00 | 23 | 01 |
| முஜீப் உர் ரஹ்மான் | 04 | 00 | 24 | 02 |
| அஹ்மதுல்லா ஒமர்சாய் | 01 | 00 | 20 | 00 |
| மொஹமட் நபி | 04 | 00 | 14 | 02 |
| ரஷீட் கான் | 04 | 00 | 12 | 00 |