இலங்கை ரசிகர்கள் நிறைந்த போட்டியில் சொதப்பிய இலங்கை.

-டுபாயிலிருந்து விமல்-

இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்து போயுள்ள போட்டி இலங்கை , ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஆசிய கிண்ண போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் சொதப்பியுள்ளது.

ஆரம்பம் முதல் விக்கெட்களை இழந்த நிலையில், இலங்கை அணி பெற்றுள்ள இந்த ஓட்ட எண்ணிக்கை போதுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி மிகவும் அபாரமாக பந்து வீசி கலக்கியுள்ளது. களத்தடுப்பிலும் மிகவும் அபாரமாக செய்யற்பட்டனர். ஆகோரோஷமா ஆப்கானிஸ்தான் அணி தமது திறமையினை வெளிக்காட்டியுள்ளது.

இலங்கை அணி துடுப்பாட்ட வரிசையில் செய்த மாற்றங்கள், இலங்கை அணியின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது. வீரர்களிடையே புரிந்துணர்வின்றி, நுட்பமின்றி விளையாடியது தெளிவாக தென்பட்டது. இலங்கை அணி இலகுவாக ஆப்கானிஸ்தான் அணியினை எடுத்துவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.

சாமிக்க கருணாரட்ன இறுதி நேரத்தில் தனித்து நின்று போராடி பெற்ற ஓட்டங்கள் இலங்கை அணிக்கு ஓரளவு கைகொடுத்து ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தியுள்ளது.

மைதானத்தின் ரசிகர்களது சாதக தன்மையினை பாவித்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் பந்து வீசினால் வெற்றி வாய்ப்பை உருவாக்கலாம்.

இறுதி விக்கெட் இணைப்பாட்டம் ஓட்டங்களை வழங்கியது.

வீரம்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸங்கபிடி – கரீம் ஜனட்நவீன் உல் ஹக்030700
குஷல் மென்டிஸ்L.B.Wபஷால்கக் பரூக்கி  020400
சரித் அசலங்கL.B.Wபஷால்கக் பரூக்கி  000100
தனுஷ்க குணதிலகபிடி – கரீம் ஜனட்முஜீப் உர் ரஹ்மான்171730
பானுக்க ராஜபக்சRun Out 382951
வனிந்து ஹசரங்கபிடி – மொஹமட்  நபிமுஜீப் உர் ரஹ்மான்020800
தஸூன் சானகபிடி –மொஹமட்  நபி000100
சாமிக்க கருணாரத்னBowledபஷால்கக் பரூக்கி  313831
மகேஷ் தீக்ஷனRun Out 000000
மதீஷ பத்திரனபிடி – நஜிபுல்லா ஷர்டான்மொஹமட்  நபி051200
டில்ஷான் மதுஷங்க,Not out 010200
உதிரிகள்  04   
ஓவர்  19.4விக்கெட்  10மொத்தம்105   
பந்துவீச்சாளர்ஓ.ஓஓட்டவிக்
பஷால் கக் பரூக்கி  03.4011103
நவீன் உல் ஹக்03002301
முஜீப் உர் ரஹ்மான்04002402
அஹ்மதுல்லா ஒமர்சாய்01002000
மொஹமட்  நபி04001402
ரஷீட் கான்04001200
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version