-டுபாயிலிருந்து விமல்-
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2022 ஆரம்பித்தது. ஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கை கிரிக்கெட்டின் ஏற்பாட்டில் முதல் போட்டி இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஆரம்பம் ஆகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியினை பார்வையிட மிக சிறிய அளவிலானவர்களே வருகை தந்துள்ளார்கள். இன்று வருகை தந்துள்ள ரசிகர்களில் அதிகளவிலானவர்கள் இலங்கை ரசிகர்கள் என்பது சுட்டி காட்டத்தக்கது.
இலங்கை அணி
தனுஷ்க குணதிலக, பத்தும் நிஸங்க, குஷல் மென்டிஸ், சரித் அசலங்க, பானுக்க ராஜபக்ச, தஸூன் சானக, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மகேஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன
ஆப்கானிஸ்தான் அணி
ஹஸ்ரதுள்லா ஜசாய், ரஹ்மனுள்ளா குர்பாஸ், இப்ராஹிம் ஷர்டான் , கரீம் ஜனட், நஜிபுல்லா ஷர்டான் ,மொஹமட் நபி, ரஷீட் கான், அஹ்மதுல்லா ஒமர்சாய், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான், பஷால் கக் பரூக்கி