முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகனுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சராகப் பணியாற்றியபோது, ​​தனது ஊழியர்களில் பதினைந்து பேரை பெயரளவில் சேர்த்து, அவர்களின் ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் கூடுதல் நேர ஊதியத்தைப் வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 8 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பினை ஏற்படுத்தியதாகக் கூறி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (03.06) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version