தமிழ் ஊடகவியலாளர்களை வலுப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக கனேடிய உயர்ஸ்தானிகர் உறுதி

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் கனேடிய உயரஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கனேடிய இல்லத்தில் நேற்று (30.04) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது தமிழ் உலகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் ஊடகவியலாளர்களை வலுப்படுத்த அவர்களுக்கான கல்வி தேவைப்பாடுகள் குறித்த கோரிக்கைகள் அவர்களை மேலும் வலுப்படுத்தி சிறந்த முறையில் செயற்படுத்த இலத்திரனியல் உபகரணங்களை வழங்கல், பட்டறைகளை நடாத்தல் மற்றும் பட்டப்படிப்பு வரை கல்வி நெறிகளை கொண்டு செல்ல உள்ளிட்ட உதவிகளை வழங்கல் தொடர்பிலும் முக்கியமாக பேசப்பட்டன.

இதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பிலான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கனேடிய உயரஸ்தானிகர், அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தினருக்கு தெரிவித்தார்.

அதேபோன்று கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்ட கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் சரியான முறையில் எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனை தாம் அவதானித்து வருவதாகவும் அது தொடர்பாக எதிர்வரும் காலங்களில் பேசவுள்ளதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்

அதேபோன்று அரச அலுவலகங்களில் தமிழ், குறிப்பாக ஊடக அறிக்கைகள் வெளியிடுகையில் தமிழ் அறிக்கைகள் குறைவாக வெளிவருகின்றமையும் அவை பொருட்படுத்தப்படாமையையும் கனேடிய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பிலும் அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கனடாவில் இருக்கின்ற தமிழ் மக்கள் தொகை அதேப்போன்று கனேடிய தமிழர்களுக்கும் கனடா அரசாங்கத்திற்கும் இலங்கை தமிழர்களுக்கும் இருக்கின்ற உறவுமுறை தொடர்பிலும் அவர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார்.

அதேபோன்று இம்முறை மூன்று தமிழர்கள் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவப்படுத்ததப்பட்டிருப்பதாகவும் அதில் இருவர் இலங்கை தமிழர்கள் என்றும் கூறினார்

இதேவேளை தொடர்ந்தும் சட்ட அமைச்சராக ஆனந்த சங்கரி செயற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கனடாவிலும் இலங்கையிலும் உள்ள தமிழர்களை பலப்படுத்துவதற்கு குறிப்பாக ஊடகவியலாளர்களை பலப்படுத்துவதற்கும் அவர்களை மேம்படுத்துவதற்கும் கனடாவில் ஊடகம் சார்ந்து இருப்போர் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு உதவி புரியும் வகையில் திட்டங்களை செயல்படுத்தவும் தன்னால் முடிந்த உதவிகளை தெரிவித்துள்ளாரவும் கனேடிய உயர்ஸ்தானிதர் மேலும் தெரிவித்துள்ளார்

சந்திப்பின்போது அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் செந்தில் வேலவர் மற்றும்அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் சிவராஜா உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version