இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபடுவற்காக பல நாடுகளை சேர்ந்த 24 நிறுவனங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு ராச்சியம்,சவூதி அரேபியா,அமேரிக்கா,சீனா,இந்தியா,ரஷ்யா,இங்கிலாந்து,மலேசியா,நோர்வே மற்றும் பிலிபைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்களே முன்மொழிவுகள் விண்ணப்பித்துள்ளன. ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டே அமைச்சர் இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.