இலங்கைக்கு முக்கியமான பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போட்டி

-ஷார்ஜாவிலிருந்து விமல்-

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி இலங்கை அணி விளையாடாவிட்டாலும் இலங்கை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறிப்போனது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மீதான பார்வை அதிரித்துள்ளது. இலங்கை அணிக்கும் கூட தேவையானது அதுவே. ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று விட்டால், இலங்கை அணி பங்களாதேஷ் அணியினை வென்றால் போதும். மாறாக பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றால், இலங்கை அணி வெற்றி பெற்றால் கூட இலங்கை அணிக்கு வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலை காணபப்டும். ஓட்ட நிகர சராசரி வேகம் இங்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

ஐக்கிய அரபு இராட்சியம் ஷார்ஜாவில் இன்றைய போட்டி நடைபெறுகிறது. பெயர் போன ஷார்ஜா மைதானத்தில் மூன்று போட்டிகள் மட்டுமே நடைபெறுகின்றன.

ஷார்ஜாவில் வெப்பமான வாநிலை காணப்படுகிறது. ஆனாலும் வழமையிலும் பார்க்க குறைவாகவே வெப்பம் இருப்பதாக ஷார்ஜாவை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

மைதானத்தில் சராசரியாக 150 ஓட்டங்கள் பெறப்படும் நிலை காணப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் அபாரமான பந்துவீச்சே இலங்கை அணியினை வெற்றி பெறக் கூடிய நிலையினை ஏற்படுத்தியது. அதே போன்ற ஆக்ரோஷமான பந்துவீசு தொடர்ந்தால் இன்றும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுக் கொள்ளக் கூடிய நிலை உருவாகும்.

பந்துவீச்சு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதக நிலைமையினை வழங்கும் நிலை காணப்படுகிறது. சுழற் பந்துவீச்சில் இரு அணிகளும் சமநிலையில் காணப்படுகின்றனர். பங்களாதேஷ் சிறிதளவு முன்னிலையில் இருப்பதாக தென்படுகிறது.

பங்களாதேஷ் அணி வழமையான வீரர்களுடனேயே களமிறங்குகிறது. சிம்பாவே தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட முக்கிய வீரர்கள் அணிக்குள் திரும்பியுள்ளனர். பந்துவீச்சு துடுப்பாட்டம் என சமநிலையன அணி. ஆகவே அவர்கள் இலங்கை அணி தடுமாறியது போன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் தடுமாறமாட்டார்கள் என கூற முடியும்.

ஆப்கானிஸ்தான் அணி ஷார்ஜா மைதானத்தில் போட்டிகளில் விளையாடி மைதான பரீட்சயம் நிறைந்த அணி. ஆகவே மைதானம் அவர்களுக்கு சிக்கல் இல்லை. இதனை ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தெரிவித்துமுள்ளார்.

இரு அணிகளும் விளையாடியுள்ள 20-20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலையில் காணப்படுகிறது. 3-2 என்ற முன்னிலை காணப்படுவதுடன், இறுதியாக நடைபெற்ற தொடர் 1 – 1 என்ற சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புள்ள போட்டி மிகவும் விறு விறுப்பாக அமையுமென நம்பப்படுகிறது.

Social Share

Leave a Reply