இலங்கையில் காணப்படும் அனைத்து விதமான தொலைத்தொடர்பு சேவைகளுக்குமான கட்டணங்களை உயர்த்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.
அதன்படி,மொபைல் நிலையான மற்றும் ப்ரோட்பேண்ட் சேவைகளுக்கான கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படுவதுடன் பியோ டிவி சேவைகளுக்கான கட்டணங்கள் 25% அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த கட்டண உயர்வானது செப்டெம்பர் 05ஆம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தொலைத்தொடர்பு சேவைகளுக்கான கட்டண உயர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை TRCSL இன் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளவும் முடியும் .