பிடிகல,தல்கஸ்வல பிரதேசத்தில் நேற்றிரவு (03.09) 31 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.நேற்று மாலையில் அருகிலுள்ள ஊருக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அருகிலிருந்த பாழடைந்த இடத்தில் மறைந்திருந்து காத்திருந்த நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு தொடர்ந்தும் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் மாற்றப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட நபர் அதிக வட்டிக்கு மக்களுக்கு கடன் வழங்குவதாகவும்,இது தொடர்பான தகராறு காரணமாக சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.