நாளை நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை 200 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் இடையே விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் லாபமானது ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 700 மில்லியனாக இருந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் நிறுவனமானது கணிசமான லாபத்தை ஈட்டியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்தார்.
எவ்வாறாயினும்,எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் உணவு மற்றும் பானங்களின் விலையை குறைக்க முடியாது என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இன்று (04.09) தெரிவித்தார்.
தொடர்ந்தும், அடுத்த வாரத்திலிருந்து இலங்கையிலுள்ள எந்த ஒரு நபருக்கும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான செயலியை வெளிநாட்டில் உள்ள மக்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் இலங்கையிலுள்ள ஒருவரின் நண்பராகவோ,உறவினராகவோ,பெற்றோர்களாவோ இருக்க கூடிய சந்தர்ப்பத்தில் இந்த செயலி மூலம் டொலரில் மிக குறைந்த கட்டணத்தை செலுத்துவதன் மூலம் தமது மாதாந்த தேவைகளுக்கேற்ப எரிவாயுவை பெற்று கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.