நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் உணவகங்களில் மற்றைய சிற்றுண்டிகளின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளன.
உணவகங்களின் அதிகாரிகள் மூலமாகவே உற்பத்திகளின் விலை அதிகரிப்புகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், கொத்து ஒன்றின் விலை 100 ரூபாவினாலும்,பாராடா ,முட்டை ரொட்டி மற்றும் மரக்கறி ரொட்டி போன்ற சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாவிற்கும் 20 ரூபாவிற்கும் இடையே அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.