சட்ட ஆவணங்களை செல்லுபடிக் காலம் வரையறுக்கப்படவில்லை

நாட்டில் பதிவாளர் நாயகத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, மரண மற்றும் திருமண பதிவு சான்றிதழ்கள் உள்ளிட்ட சட்ட ஆவணங்களுக்கு செல்லுபடிக் காலம் வரையறுக்கப்படவில்லை என தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகத்தினால் விநியோகிக்கப்பட்ட சில சான்றுப்பத்திரங்களின் பிரதிகள் 6 மாதங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பினும் அத்தகைய உறுதிப்படுத்தல் தேவையில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்,இது தொடர்பில் கல்வி அமைச்சு,குடிவரவு,குடியகல்வு திணைக்களம்,ஆட்பதிவு திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply