-டுபாய் மைதானித்திலிருந்து விமல்-
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று(11.09) ஐக்கிய அரபு இராட்சியம், டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தற்சமயம் நடைபெற்று வருகிறது.
இலங்கை அணி துடுப்பாட்ட ஆரம்பத்தில் மிகவும் மோசமாக தடுமாறி இறுதியில் வெற்றி பெறக்கூடிய வலுவான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு 171 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குஷல் மென்டிஸ் கடந்த போட்டி போன்றே முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் மிக மோசமான பின்னடைவாக இதுவே அமைந்தது.
இலங்கை அணிக்காக தொடர்ச்சியாக ஓட்டங்களை குவித்து வரும் பத்தும் நிசங்கவும் வேகமாக ஆட்டமிழந்தார். நிலைமை மேலும் மோசமடைய, தனுஷ்க குணதிலகவும் தொடர்ந்து ஆட்டமிழக்க இலங்கை அணியின் நிலை முடிந்தது என்ற தருணம் உருவானது. அவ்வாறான நிலையில் பானுக ராஜபக்ஷ களம் நுளைந்து, தனஞ்சய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்து இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க தனஞ்சய ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தலைவர் தஸூன் சானாக்க ஆட்டமிழக்க இலங்கை அணியின் நிலைமை படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
முழு நேர துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் பானுக்க ராஜக்ஷவுடன் இணைந்த வனிந்து ஹசரங்க நம்பிக்கை தரும் விதமாக துடுப்பாடி, இணைப்பாட்டத்தை ஏற்படுத்தினார். பானுக, ஹசரங்க ஓட்டங்களை உயர்த்தி கொடுக்க இலங்கை அணி மீண்டது.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நஸீம் ஷா முதல் ஓவரினை அபாரமாக வீசி இலங்கை அணியின் முதல் விக்கெட்டினை கைபப்ற்றி தடுமாறு வைத்தார். அதனை தொடர்ந்து ஹரிஸ் ராஃப் இன் பந்துவீச்சு வேகமாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் அமைந்தது. அவற்றை சாதகமாக பயன்படுத்தி இலங்கை அணியை பாகிஸ்தான் அணி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. முதல் 10 ஓவர்கள் வரையில் முழுமையான அழுத்தத்தில் காணப்பட்ட இலங்கை அணி அதன் பின்னர் ஓரளவு மீண்டது.
பானுக ராஜபக்ஷ நுட்பமான தேவையான சிறந்த துடுப்பாட்டத்தை மேற்கொண்டார். மறு புறத்தில் அதிரடியான துடுப்பாட்டத்தை வனிந்து ஹஸரங்க மேற்கொண்டார். ஆரம்பத்தில் அச்சுறுத்திய பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை சிறப்பாக அதிரடியாக கையாண்ட பானுக-வனிந்து ஜோடி இலங்கை அணியினை நம்பிக்கையான இடத்துக்கு எடுத்து சென்ற வேளையில் வனிந்துவின் விக்கட்டினை ஹரிஸ் ராஃப் கைப்பற்றி 58 ஓட்ட இணைப்பாட்டத்தை முறியடித்தார்.
தொடர்ந்தும் பானுக, சாமிக்க ஜோடி ஒட்டங்களை உயர்த்தியது. சாமிக்க கருணாரட்னவின் நிதானம் கலந்த அதிரடி மேலும் இலங்கை அணிக்கு ஓட்டங்களை உயர்த்தியது. பானுக்க ராஜபக்ஷவின் பிடியும் நழுவ விடப்பட இலங்கை அணிக்கு மேலும் நிம்மதி கிடைத்தது.
இறுதியில் இலங்கை அணி வலுவான சவால் வழங்க கூடிய ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொண்டது. பானுக தனது மூன்றாவது அரை சதத்தை பூர்த்தி செய்துகொண்டார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | பிடி- பாபர் அசாம் | ஹரிஸ் ரவுஃப் | 08 | 11 | 1 | 0 |
| குசல் மென்டிஸ் | BOWLED | நஷீம் ஷா | 00 | 01 | 0 | 0 |
| தனஞ்சய டி சில்வா | பிடி- இப்திகார் அகமட் | இப்திகார் அகமட் | 28 | 21 | 4 | 0 |
| தனுஷ்க குணதிலக்க | BOWLED | ஹரிஸ் ரவுஃப் | 01 | 04 | 0 | 0 |
| பானுக ராஜபக்ச | 71 | 45 | 5 | 3 | ||
| தஸூன் ஷானக | BOWLED | ஷதாப் கான் | 02 | 03 | 0 | 0 |
| வனிந்து ஹசரங்க | பிடி- முகமட் ரிஸ்வான் | ஹரிஸ் ரவுஃப் | 36 | 21 | 5 | 1 |
| சாமிக்க கருணாரட்ன | 14 | 14 | 0 | 1 | ||
| மஹீஷ் தீக்ஷன | ||||||
| அசித்த பெர்னாண்டோ | ||||||
| உதிரிகள் | 10 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 170 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| நஷீம் ஷா | 04 | 00 | 41 | 01 |
| மொஹமட் ஹஸ்னைன் | 04 | 00 | 41 | 00 |
| ஹரிஸ் ரவுஃப் | 04 | 00 | 29 | 03 |
| ஷதாப் கான் | 04 | 00 | 28 | 01 |
| இப்திகார் அகமட் | 03 | 00 | 21 | 01 |
| முகமட் நவாஸ் | 01 | 00 | 03 | 00 |
1 பாபர் அசாம் (தலைவர்), 2 முகமட் ரிஸ்வான், 3 ஃபகார் ஷமான், 4 ஆசிப் அலி, 5 இப்திகார் அகமட், 6 குஷ்தில் ஷா, 7 ஷதாப் கான், 8 முகமட் நவாஸ் 9 மொஹமட் ஹஸ்னைன் 10 ஹரிஸ் ரவுஃப், 11 நஷீம் ஷா
இலங்கை
1 குசல் மென்டிஸ் , 2 பத்தும் நிஸ்ஸங்க, 3 தனஞ்சய டி சில்வா 4 பானுக ராஜபக்ச, 5 தனுஷ்க குணதிலக்க, 6 தஸூன் ஷானக, 7 வனிந்து ஹசரங்க, 8 சாமிக்க கருணாரட்ன, 9 மஹீஷ் தீக்ஷன, 10 ப்ரமோட் மதுஸங்க, 11 டில்ஷான் மதுசங்க