ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபேயின் இறுதிச் சடங்கில் ரணில் விக்ரமசிங்க.

அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27.09) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியுடன் அவரது பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹரிஸ், உள்ளிட்ட பல வெளிநாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

கடந்த ஜூலை மாதம் 08 ஆம் திகதி நிகழ்வொன்றில் உரையாற்றும் போது ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பானில் அதிக காலம் பிரதமராக கடமையாற்றியவரும், ஜப்பானின் சிறந்த பிரதமர் எனவும் ஷின்ஸே அபே போற்றப்படுகின்றார்.

Social Share

Leave a Reply