உலக கிண்ண 20-20 தொடருக்கான இந்தியா அணிக்கு பாரிய அடி

இந்தியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரிட் பும்ரா உலக கிண்ண 20-20 தொடரில் விளையாட முடியாத நிலையில் அணியிலிருந்து விலகியுள்ளார் என இந்தியா ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று(28.09) இந்தியா, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணியுடனான போட்டியில் பும்ரா விளையாடுவதாக இருந்த போதும், நாணய சுழற்சிக்கு சற்று முன்னர் அவரது உபாதை தொடர்பில் மருத்துவகுழுவுக்கு தெரிவித்த நிலையில் அவர் அணியிலிருத்து விலக்கப்பட்டார்.

புதுக்குப்புற அழுத்த முறிவு காரணமாகவே அவர் அணியிலிருந்து விலகியதோடு, உலக கிண்ண தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அதிகாரிகளது தகவலை அடிப்படையாக கொண்டு குறித்த இந்திய ஊடகம் இந்த தகவலை பகிர்ந்துள்ளது.

ஜஸ்பிரிட் பும்ரா இல்லாமல் போனால் இந்தியா அணிக்கு அது பாரியளவிலான பின்னடைவினை வழங்கும். அண்மைக்காலமாக பும்ராவுக்கு ஓய்வினை வழங்கி அவரை பாதுகாத்த நிலையிலும் தற்போது உபாதை ஏற்பட்டுள்ளது.

இந்த உலக கிண்ண தொடரில் பும்ரா பாரியளவில் தாக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் வெளியேற்றம் பாரிய பின்னடைவை இந்தியா அணிக்கு வழங்கவுள்ளது. ஏற்கனவே ரவீந்தர் ஜடேஜா உபாதையடைந்து அணியிலிருந்து விலகிய நிலையில் இந்தியா அணிக்கு அதுவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மொஹமட் ஷமியும் உபாதை காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த இழப்புகள் இந்தியா அணி உலக கிண்ண தொடரை கைப்பற்றும் வாய்ப்புகளை குறைவடைய செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply