வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாலிக்குளம் பகுதியில் சைக்கிளில் சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்றினால் மோதியத்தில் முதியவர் ஒருவர் இறந்துள்ளார்.
இன்று மதிய வேளையில் மன்னார் வீதியூடாக சைக்கிளில் பயணித்தவர் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவுவண்டியின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் காலமானார்.
தாலிக்குளம் பகுதியை சேர்ந்த 68 வயதான ராயகோபால் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.
மோட்டார்சைக்கிளை செலுத்திய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.