சமூக பங்களிப்புக்கான 2.5 சதவீத வரி அறவீடு. பொருட்களின் விலைகள் அதிகரிக்கவுள்ளன.

சமூக பங்களிப்புக்கான 2.5 சதவீத வரி இன்று முதல் அமுல் செய்யப்படுகிறது. 12 கோடிக்கும் அதிகமான காலாண்டு வருமானமுடைய இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் ஆகியோருக்கு இந்த வரி அறவீடு அமுல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வரியின் மூலமாக 140 பில்லியன் வருமானம் காலாண்டுக்கு கிடைக்குமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரியின் மூலமாக பொருட்கள் மற்றும் சேவைகளது விலைகளில் அதிகரிப்பு ஏற்படுமென பொருளாதார நிபுணர் குழு அறிவித்துள்ளது. இந்த வரி அறவீடு தற்காலிக அளவுகோலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் முதற்கட்டமாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தங்களது பொருட்களில் விலையதிகரிப்பு ஏற்படுமென அறிவித்துள்ளது.

இந்த வரி வருமானத்தின் மூலம் கொவிட் 19 இனால் ஏற்பட்ட பொருளாதர பின்னடைவினை மீண்டும் உயர்த்த முடியுமென்ற எதிர்பார்ப்பிலேயே இந்த வரி அறவீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து பொருட்கள், டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு, உள்ளூர் பால் தயாரிப்புகள், ரப்பர், கறுவா போன்ற பொருட்களுக்கு இந்த வரி அறவிடப்படாது எனவும், மின் உற்பத்தி, மருத்துவ சேவைகள், நீர் விநியோகம், பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து சேவை, புடவை தயாரிப்புகள், சுற்றுலா சேவைகள், ஆயுள் காப்புறுதி, சினிமா, ஒன்லைன் சேவைகள் அடங்கலாக இன்னும் பல சேவைகளுக்கும் உற்பத்திகளுக்கும் இந்த வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply