நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் பழுதுகள் திருத்தப்பட்டு தேசிய மின் விநியோகத்தில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
முதலாவது மற்றும் மூன்றவது மின் பிறப்பாக்கிகள் முழுமையாக செயற்படுவதாகவும், மின் விநியோகம் முழுமையாக நடைபெறுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். முதலாவது மின் பிறப்பாக்கி பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தனது சேவையினை ஆரம்பித்துள்ளது.
அண்மையில் பழுதடைந்திருந்த இரண்டாவது மின்பிறப்பாக்கி ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் வழமையான சேவைக்கு திரும்புமென அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.