அரசர் சார்ள்ஸ் தனது முதலாவது பொது சந்திப்பில் பிரித்தானிய வாழ் இலங்கையரை சந்திக்கவுள்ளார் என இங்கிலாந்து அரண்மனை செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாராணியின் இறப்புக்கான துக்க தின நிகழ்வுகள் நிறைவடைந்ததும், அரசர் சார்ள்ஸ் இற்கு வரவவேற்ப்பு நிகழ்வுகள் ஸ்கொட்லாந்து, எடின்பரோவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரித்தானிய வாழ் தெற்காசிய நாட்டவர்களான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நேபாள், பூட்டான், மாலதீவுகள் ஆகிய நாடுகளை சேர்ந்த 200 தொடக்கம் 300 பேர் வரையிலானவர்கள் அழைக்கப்படவுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய சுகாதார சேவை முதல் கலை, ஊடகம், கல்வி, வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் உள்ளடங்கலாக இங்கிலாந்தவரின் வாழ்க்கையில் இந்த சமூகங்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் முகமாகவே இந்த சமூகங்கள் அழைக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படவுள்ளது.