பாரளுமன்ற பொது நிறுவன குழுவிலிருந்து தான் விலகி பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் சரித் ஹேரத்திற்கு அந்த குழுவில் இடம் வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று அறிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச பேராசிரியர் சரித் ஹேரத்தின் பெயரை குறித்த குழுவில் சேர்க்குமாறு பரிந்துரை செய்துள்ளார்.
நேற்றைய தினம் பாரளுமன்றத்தில் சபாநாயகரினால் கோப் குழுவிற்க்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதன்போது போது கோப் குழுவின் முன்னாள் தலைவரான பேராசிரியர் சரித் ஹேரத் சேர்க்கப்படவில்லை. அத்தோடு தான் சேர்க்கப்படாமை தொடர்பில் அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தனக்கு இடம் வழங்கப்படவிலை எனவும், ஊழல் மோசடிகளுக்கு ஆதரவானவர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல ஊழல்கள் மறைக்கப்படவுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
“திருடர்கள் வென்றுவிட்டார்கள்” என கூறிய பேராசிரியர் சரித் ஹேரத் டீல் செய்பவர்களும், ஊழல்வாதிகளும் வென்றுவிட்டதாகவும், கூறியுள்ள அதேவேளை, ஜனாதிபதி பிரதமர் ஆகியோருக்கு எதிராகவும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.