ஆட்சியாளர்கள், புலிகள், ஜே.வி.பி நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் – மிகிந்தலை பிரதம குரு

நாட்டின் இந்த மோசமான நிலைமைக்கு நாட்டின் ஆட்சியாளர்களே காரணமென மிஹிந்தலை ரஜமாக விகாரையின் பிரதம குரு, வணக்கத்துக்குரிய வலவஹெங்குனவெவ தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சுதந்திரமடைந்த காலத்திலிருந்தான மிக மோசமான நிலையில் நாடு காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினரின் கடந்த கால செயற்பாடுகளும் இந்த நாட்டின் மோசமான நிலைக்கு காரணமென குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆட்சியாளர்கள் சுகபோகங்களை அனுபவித்து வருவதாகவும், சாதாரண மக்கள் சத்தான உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதாகவும் மிஹிந்தலை விகாரையின் 2282 ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

பொருளாதாரத்தை சீர்குலைத்து, நாட்டை அழித்தவர்கள் புனிதர்கள் போன்று தம்மை காட்டிக்கொள்வதாகவும், மக்களை ஏமாற்றுவதாகவும், அவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமெனவும் தேரர் மேலும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மோசடி கும்பல்களை பாதுகாக்க உயர் பாதுகாப்பு வலயங்களை அமுல் செய்வதனை விடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டையும் உயர்த்துவது நாட்டின் ஜனாதிபதியின் கடமை என மேலும் கூறியுள்ளார்.

பாதுகாவலராக எவ்வாறு செயற்படுவதென அரஹத் மஹிந்த புத்தரின் போதனைகளை அரசன் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதித்தது போன்று நாட்டின் தற்போதைய இக்காட்டான சூழ்நிலையிலிருந்து பாதுகாக்க சரியான முறைமை ஒன்று உருவாக்கப்படவேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply