2022 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவானது இந்தியா மகளிர் அணி. பங்களாதேஷில் நடைபெற்ற தாய்லாந்துடனான அரை இறுதிப் போட்டியில் 74 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்தியா அணி தொடர்ச்சியான எட்டாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தாய்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷபாலி வர்மா 42 ஓட்டங்களையும், ஹர்மான்ப்ரீட் கோர் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சொர்னரின் ரிப்போச் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 74 ஓட்டங்களை பெற்றது. நறுமோல் சைவாய், நட்டாயா போச்சதாம் ஆகியோர் தலா 21 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்களையும், ராஜேஷ்ஷரி கெய்க்வார்ட் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
தாய்லாந்து அணி முதற் தடவையாக ஆசிய மகளிர் கிண்ண தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.
இன்று இலங்கை நேரப்படி 1.00 மணிக்கு இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.