பொது பலசேனவின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு சமூகமளிக்காத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் இஸ்லாமிய சமூகத்தவரது உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டார் என குற்றம் சுமத்தி அவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கிற்கு அவர் வருகை தாராமைக்கான சரியான காரணம் வழங்கப்படாமையினால் இந்த பிடியாணை வழங்கப்பட்டுள்ளது.