இலங்கை, இந்தியா மகளிர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இன்று

இலங்கை, இந்தியா அணிகள் மோதும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்று வரும் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,
பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராட்சியம், தாய்லாந்து, மலேசியா ஆகிய 7 அணிகள் மோதின. இவற்றுள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

கடந்த முறை இந்தியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்து முதற் தடவையாக கிண்ணமின்றி தொடரை நிறைவு செய்தது. இதுவரை நடைபெற்ற சகல தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு இந்தியா அணி தகுதி பெற்றுள்ளது.

இலங்கை அணி 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணியுடன் 1 ஓட்டத்தினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது இலங்கை அணி.

பலமான இந்தியா அணியுடன் முதல் சுற்றில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி இந்தியா அணியிடம் தோல்வியடைந்தது. இந்தியா அணிக்கான வாய்ப்புகள் அதிகமான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற மிக பெரியளவில் போராட வேண்டும்.

Social Share

Leave a Reply